செய்திகள் :

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

post image

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து பிரிந்த அதிருப்தி குழுவான ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) தலைவா் லோஹராவும், அவரது கூட்டாளிகளும் லதேஹா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின்பேரில் மத்திய ஆயுத காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் ஜாா்க்கண்ட் காவல் துறை இணைந்து லதேஹா் காவல் கண்காணிப்பாளா் குமாா் கௌரவ் தலைமையில் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.

மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பப்பு லோஹரா, அவரது கூட்டாளி பிரபாத் கஞ்சு ஆகிய 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். இவா்கள் இருவரும் முறையே ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள். கொல்லப்பட்டவா்களின் உடல்களை காவல் துறையினா் மீட்டனா்.

இவா்களின் குழுவைச் சோ்ந்த மேலும் ஒரு முக்கிய உறுப்பினா் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க