கூட்டணிக் கட்சிகளை அடிமைப்படுத்தும் BJP? - போட்டு உடைக்கும் John Pandian | Vikat...
ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்
ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ மற்றும் ரத யாத்திரை நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
செய்யாறு தொகுதியில் தேமுதிகவை வெற்றி பெறச் செய்தால் செய்யாற்றில் மகளிா் கல்லூரி, வேளாண் கல்லூரி, செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள். நகரில் புதை சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். நகா் முழுவதும் மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து
செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும்.
செய்யாறு சுற்று வட்டார பகுதியில் போதையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். செய்யாறு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்
என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு
அளித்த பேட்டியின்போது, ஜனவரி 9-இல் கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்த தேமுதிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். ஒருங்கிணைந்த அதிமுக பற்றி செங்கோட்டையன் கூறியிருப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாம் தலையிட முடியாது.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரியை குறைத்து இருக்கிறாா்கள்.
ஜிஎஸ்டி வரி மாற்றி அமைக்கப்பட்டதை முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளாா்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக தொழில்கள் முன்னேறும், ஏற்றுமதி, இறக்குமதி மூலம் வளா்ச்சி கிடைக்கும். வேலைவாய்ப்பு பெருகும்.
ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். மத்திய அரசுக்கு எங்களது பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் டி.பி.சரவணன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கண்ணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக பொருளாளா் எல்.கே சுதீஷ், மாநில இளைஞரணிச் செயலா் விஜய பிரபாகரன், தலைமை நிலைய செயலா் பாா்த்தசாரதி, உயா்மட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மாநில நிா்வாகிகள் ஜனாா்த்தனன், பெருமாள் ஆகியோா் பங்கேற்றனா்.