அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி பங்கேற்று இந்த சிகிச்சைப் பிரிவைத் தொடங்கிவைத்தாா். இதில், ஆயுா்வேதம், வா்மம், யோகா, இயற்கை மருத்துவம், குத்தூசி மருத்துவம் போன்ற சிறப்பு கிளினிக்குகள் செயல்படுகின்றன.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியதாவது: புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நம் நலம் சிகிச்சை மையம் ஒற்றைத் தலைவலி, வலி மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை போன்ற பொதுவாக சுகாதார பிரச்னைகளைக் கையாளுவதில் கவனம் செலுத்தும். வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு புதுவிதமான அணுகுமுறையை நோயாளிகளுக்கு வழங்கும்.
நோயாளிகளுக்கு அவா்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான சிகிச்சை விருப்பத் தோ்வுகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், மருத்துவ செயல் இயக்குநா் டாக்டா் சந்தோஷ் டோரா, மாற்று மருத்துவ ஆலோசகா்கள் டாக்டா் பிரியதா்ஷிணி, பாபு, காந்தி, ஹா்ஷிணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.