ஜிப்மரில் சுகாதார உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஐசிஎம்ஆர் நிதியுதவி பெற்ற திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஜிப்மரில் ஒப்பந்தகால அடிப்படையிலான சுகாதார உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Health Assistant
காலியிடங்கள்:3
சம்பளம்: மாதம் ரூ.21,600
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி., எம்எல்டி, எம்எஸ்டபுள்யு ஆகிய ஏதாவதொன்றை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன், கணினியில் பணி செய்யும் திறன் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ,அதை பூர்த்தி செய்து, அதனுடனஅ தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை சேர்த்து jipmerhwcoope@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.3.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.