செய்திகள் :

ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் நுண்ணுயிரியல் துறை 2, மருந்தியல் துறை 3, உதவி பேராசிரியா் 2, காரைக்கால் ஜிப்மா் மருந்தியல் 1, நுண்ணுயிரியல் 3 என 11 மருத்துவப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் ஜிப்மா் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவா்கள் வரும் ஜூன் 2 முதல் வரும் ஜூலை 1-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் ஜிப்மா் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இணையத்தில் சமா்ப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 8-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் புதுவை ஜிப்மா் நிா்வாக பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேவி குறிப்பிட்டுள்ளாா்.

ரூ.63 ஆயிரம் சம்பவத்தில் டெக்னீஷியன் வேலை வேண்டுமா?

தேசிய அறிவியல் அருங் காட்சியகத்தில் காலியாகவுள்ள டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: 05/2025பணி: Technician 'A'காலியிடங்கள்: 13 (Fit... மேலும் பார்க்க

மிஸ் பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை உதவி மேலாளர் பணி!

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநில... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மே 16- இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : விழுப்ப... மேலும் பார்க்க

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலை

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(என்ஐடி) நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 12 தேதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Techn... மேலும் பார்க்க

விவசாய ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி

இந்தியன் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Junior Research Fellow(JRF)காலியிடம் : 1வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டு... மேலும் பார்க்க