செய்திகள் :

ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

post image

சென்னை: பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேட்டூா் அணையில் தற்போது ரூ. 20 கோடி செலவில் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாசனத்துக்காக மேட்டூா் அணை திறக்கப்படும்போது பணிகள் நிறுத்தப்படும். பாசனக் காலம் முடிந்த பிறகு மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் புகார்

இந்த நிலையில், பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மேட்டூர் அணை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை திறப்பு செய்தியால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

பசிபிக் பெருங்கடலின் அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், ஈக்வடார் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் எஸ்மெரால்தஸ் நகரத்தின் வடகிழக்கிலிருந்து சுமார் 20.9 கி.மீ. தொலைவிலுள்ள பசிபிக... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?

சௌதி அரேபியா நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ளார். சௌதி அரேபியாவை ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்-வாலீத் பின் காலெத் பின் தலால்,... மேலும் பார்க்க

அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன்! முதல் வரிசையில்..!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச... மேலும் பார்க்க

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது

கரூர்: இரிடியம் தருவதாகக் கூறி கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய மதுரை காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் தெற்கு காந்திகிராமத்தை ... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதியில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.சேந்தமங்கலம் ஜ... மேலும் பார்க்க

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!

ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றன.உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு இன்றும் நாளையும் (ஏப். 25, 26) நடைபெறுகிற... மேலும் பார்க்க