ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் ஜூலை 26-ஆம் தேதி இரவு 7.50-க்கு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அவர், தூத்துக்குடியில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்துப் பேசுகிறார்.
பின்னர், இரவு 9.40-க்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். ஜூலை 27-ஆம் தேதி காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார்.
அங்கு பகல் 12 மணிக்கு நடைபெறும் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30-க்கு தில்லி செல்கிறார்.