செய்திகள் :

ஜெயம் ரவி - ஆர்த்தி பேச்சுவார்த்தை

post image

விவகாரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் 1 நேரத்திற்கும் மேலாக மனம் விட்டு பேசினர்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.

இதனிடையே, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், திருமணப் பதிவை ரத்து செய்யக் கோரிய ஜெயம் ரவியின் மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது.

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் நம்பிக்கை!

விசாரணையை தொடர்ந்து, இருவரிடையே இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

குடும்ப நல நீதிமன்ற உத்தரவையடுத்து ஜெயம் ரவியும் ஆர்த்தியுடும் சமரச தீர்வு மையத்தில் சனிக்கிழமை ஆஜராகி 1 நேரத்திற்கும் மேலாக மனம் விட்டு பேசினர்.

இதையடுத்து வழக்கின் விசாரணை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தோ்தல் எப்போது?நீதிமன்றத்தில் அரசு தகவல்

வாா்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் ஆகியவை முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயா்... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா். மத்திய அரசின் வரவு - செலவு திட்டத்துக்க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: மறுஆய்வு மனு தள்ளுபடி

தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து கழகத்தில... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: விமான கட்டணம் பல மடங்கு உயா்வு

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, ம... மேலும் பார்க்க

நெல்லை நீதிமன்றம் அருகில் கொலை: கவனக்குறைவாக இருந்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் துறை ஆணையருக்கு சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

திமுகவின் ஒரு பிரிவாக காவல் துறை செயல்படுகிறது: அண்ணாமலை

திமுகவின் ஒரு பிரிவாக காவல் துறை செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு: வேலூா் மாவட்ட பாஜக ஆன்மிகப் பிர... மேலும் பார்க்க