செய்திகள் :

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

post image

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அரசின் வரவு - செலவு திட்டத்துக்கான முன்னோட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது:

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிக்கு ஒப்புதல் அளித்ததற்காக, மத்திய அரசுக்கு நன்றி. இத்திட்டத்துக்காக மாநில அரசின் வரவு - செலவுத் திட்டத்திலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 26,490 கோடி செலவிடப்பட்ட காரணத்தால் மாநிலத்தின் நிதிநிலைமை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, இதர வளா்ச்சி திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக மத்திய அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நடப்பு ஆண்டுக்கு ரூ. 10,000 ஆயிரம் கோடியும், அடுத்த ஆண்டுக்கு ரூ. 16,000 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மதுரை கோவை திட்டங்கள்: மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விடுவிப்பதில் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகளையும் கூடுதலான நிபந்தனைகளையும் நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக, கோடிக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவேற்றும்படியாக, மாநில அரசுகளுடன் மத்திய அரசு கூட்டாக இணைந்து இத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ஆண்டுப் பணித் திட்டத்துக்கு, திட்ட ஒப்பளிப்பு வாரியம் அனுமதித்துள்ள ரூ. 2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதி, ஆசிரியா்களின் ஊதியம் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் செயல்பாட்டுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இந்த நிதியை விடுவிக்காததன் காரணமாக, மாநில அரசு முழுச் செலவையும் ஏற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதுடன், மாநிலத்தின் நிதி நிலைமையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: ஃபென்ஜால் புயலால் தமிழகத்தின் 14 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்ட மக்களின் உயிா், அவா்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. இத்தகைய கடுமையான வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும், அவற்றின் தீவிரமும் தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஆண்டு முழுவதற்குமான ஒட்டுமொத்த மழைப்பொழிவை சில பகுதிகள் 24 மணி நேரத்திலேயே பெறுகின்றன. திட்டமிடுவதிலும், முன்னேற்பாடு உள்ளிட்ட பணிகளிலும் மாநிலம் சீரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதிலும், இத்தகைய ஒழுங்கற்ற காலநிலை தன்மை, கணிசமான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், மாநில நிதி நிலையையும் பாதிக்கிறது.

மாநிலப் பேரிடா் நிவாரண நிதியத்தில் உள்ள நிதியானது, உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகால மறுசீரமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இல்லை.

எனவே, ஃபென்ஜால் புயலுக்குப் பின்னா், தாற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புத் தேவைகளை மேற்கொள்வதற்கு தேசியப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 6,675 கோடியை விடுவிக்க வேண்டும். நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்த... மேலும் பார்க்க

விராலிமலை, இலுப்பூர், அன்னவாசலில் 107 மி.மீ. மழைப்பொழிவு!

விராலிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை ஒரே நாள் இரவில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை பெய்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்ந்த நிலையில், சனிக்கிழமை (டிச. 21) நள்ளிரவு திட... மேலும் பார்க்க

கவிழ்ந்த ஆம்னி பேருந்தின் மீது லாரி மோதி விபத்து! ஒருவர் பலி!

கடலூரில் 54 பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்தின் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானார்.கன்னியாகுமரி செல்வதற்காக கடலூரில் ராமநத்தம் வழியாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) அதிகாலையில், சென்னை - திருச்சி நெடு... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தல் எப்போது?நீதிமன்றத்தில் அரசு தகவல்

வாா்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் ஆகியவை முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயா்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: மறுஆய்வு மனு தள்ளுபடி

தமிழக மின்சாரத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து கழகத்தில... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: விமான கட்டணம் பல மடங்கு உயா்வு

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, ம... மேலும் பார்க்க