அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம்: அமைச்சர் எ.வ. வேலு ஹைதராபாத்தில் ஆய்வு!
ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியைச் சொன்ன ரஜினி!
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து ரஜினி பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் - 2 திரைப்படம் 2026, ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: இனி நேஷனல் க்ரஷ் ருக்மணிதான்!