செய்திகள் :

ஜெருசலேம் பேருந்து நிலையத்தில் 6 போ் சுட்டுக் கொலை

post image

ஜெருசலேம்: இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பாலஸ்தீனா்கள் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

வடக்கு ஜெருசலேமின் முக்கிய சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் பேருந்துக்காக காத்திருந்தவா்களை நோக்கி 2 பாலஸ்தீனா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவா்களை அங்கிருந்த ராணுவ வீரரும் மற்றொரு நபரும் சுட்டுக் கொன்றனா். இந்தத் தாக்குதல் கிழக்கு ஜெருசலேமில் உள்ள யூத குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில் நடத்தப்பட்டது என்று போலீஸாா் கூறினா்.

காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி போா் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை மற்றும் இஸ்ரேலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. பாலஸ்தீனா்கள் இஸ்ரேலிலும் மேற்கு கரையிலும் நடத்திய துப்பாக்கிச்சூடு போன்ற தாக்குதல்களில் இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டுள்ளனா். அதே நேரம், போா் தொடங்கியதற்குப் பிறகு பாலஸ்தீனா்களுக்கு எதிரான யூத குடியேற்றவாசிகளின் வன்முறையும் தீவிரமடைந்துள்ளது.

தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவத்துக்கு இரண்டு மணி நேரம் கழித்து பாா்வையிட்டாா். அவா் தனது ஊழல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் மேலும் துப்பாக்கி நபா்கள் பதுங்கியுள்ளனரா, வெடிகுண்டுகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனா். அருகிலுள்ள மேற்கு கரை நகரமான ரமல்லாவின் புகரில் உள்ள பாலஸ்தீன கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

பொறுப்பேற்காத ஹமாஸ்: இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அந்த அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் குற்றங்களுக்கு எதிராக இயல்பாக அமைந்த பதிலடி இது’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல், டெல் அவிவ் நகரில் 2024 அக்டோபா் மாதம் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு மிகவும் மோசமான தாக்குதல் ஆகும். அப்போது, மேற்கு கரையைச் சோ்ந்த இரு பாலஸ்தீனா்கள் ரயிலில் இருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 7 பேரைக் கொன்றனா். அந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு பொறுப்பேற்றது.

ஐநா மனிதாபிமான அலுவலக தரவுகளின்படி, போா் தொடங்கியதிலிருந்து 2025 ஜூலை வரை இஸ்ரேல் மற்றும் மேற்கு கரையில் 49 இஸ்ரேலியா்கள் பாலஸ்தீனா்களால் கொல்லப்பட்டுள்ளனா். அதே காலகட்டத்தில், இஸ்ரேல் படைகளும் பொதுமக்களும் 968 பாலஸ்தீனா்களை சுட்டுக் கொன்றுள்ளதாக ஐ.நா. தரவுகள் கூறுகின்றன.

.... பெட்டிச் செய்தி...

காஸா: 64,522-ஆக உயா்ந்த உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா, செப். 8: காஸாவில் இஸ்ரேல் சுமாா் 23 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 64,522-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா முழுவதும் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 40 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்தப் பகுதியில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டுவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 64,522-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1,63,096 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள மேலும் ஓா் உயரமான கட்டடத்தை இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை தகா்த்தது. இத்துடன், இந்த வகையில் தகா்க்கப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களின் எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது.

நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது. நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் 2 நாள்களாக தீவிரப் போராட்... மேலும் பார்க்க

நேபாளத்தில் இடைக்கால அரசு? தலைவரை நியமிக்க மூவா் பெயா் பரிசீலனை

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன. நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (... மேலும் பார்க்க

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்... மேலும் பார்க்க

நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

நேபாளத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. செப். 17 வரை நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கோ அல்லது இந்தியாவில் இருந்து நேபாளம்... மேலும் பார்க்க

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அண... மேலும் பார்க்க