Thug Life "கடல் படத்துக்கு வாய்ப்பு தேடினேன்; 14 வருஷம் கழிச்சு இன்னைக்கு.."- நெ...
ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!
ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 39 வயதான ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும், ஹர்பர்க் நகரில் உள்ள சென்ட்டிரல் ரயில் நிலையத்தில், இவர் தனி ஒருவராகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையாக அப்பெண் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.