செய்திகள் :

ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயம்: இந்திய தூதரகம்

post image

புது தில்லி: ஜொ்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்ததாகவும் அவா்களுடன் தொடா்பில் உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘ ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தையில் காரை வேகமாக ஓட்டி வந்த சவூதி அரேபியாவைச் சோ்ந்த மருத்துவா் நடத்திய தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று போ் வீடு திரும்பினா். மீதமுள்ளவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். காயமடைந்த இந்தியா்களுக்கு தேவையான உதவிகளை தூதரகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்குள் வேகமாக காா் ஓட்டி வந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதினாா். இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்; சுமாா் 200 போ் காயமடைந்தனா்.

ஆளுநர்கள் மாற்றம்!

கேரளம் மாநில ஆளுநர் உள்பட 4 மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். முன... மேலும் பார்க்க

செல்போன் ரீசார்ஜ் திட்டத்தில் மாற்றம்!

செல்போன் ரீசார்ட் கட்டண விதிகளில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கும் தனியாக ரீசாஜ் செய்துகொள்ளலாம்; இணையத்துக்கும... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய அரசு: மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி!

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தியவாறு விவசாயிகள் பேரணியாகச் சென்றனர்.விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு இருளில் மூழ்கியுள்ளதாகவும், இதனைக் கண்டிக்கும் வகையில... மேலும் பார்க்க

ராணுவ வாகனம் விபத்து: 5 வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 350 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவ... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: இதுவரை 47பேர் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், வன்முறை தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வன்முறையில் ஈடுபட்டதாக 91 ... மேலும் பார்க்க

கோவாவில் இறைச்சிக் கடைகள் மூடல்: மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

கோவாவில் இறைச்சி வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்துவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கோவா மாநிலத்தில் பசுப் பாதுகாவலர... மேலும் பார்க்க