ஜேசன் சஞ்சய் படத்தின் அப்டேட்!
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான, முன்தயாரிப்புப் பணிகளில் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார்.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படமென்பதால் பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாரிப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இப்படத்தின் நாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில நாள்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்சன் பின்னணியில் படத்தை கதை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.