செய்திகள் :

`ஜே.டி.வான்ஸையும், என் பேத்தியையும் வாழ்த்துகிறேன்'- அமெரிக்க துணை அதிபரை வாழ்த்தும் ஆந்திரா பாட்டி

post image

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து கவனம் பெற்றவர் துணை அதிபராகப் பதவியேற்ற ஜேடி வான்ஸ். இவர் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுகுரி என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். டிசியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் உஷா சிலுகுரி வான்ஸ், ஜேடி வான்ஸ் அமெரிக்கத் துணை அதிபராக பதவியேற்கும் நிகழ்வில், தன் கணவரை பெருமையுடன் பார்த்து மகிழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஜேடி வான்ஸ் - உஷா சிலுகுரி வான்ஸ்

இந்த நிலையில், ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வரும் உஷா சிலுகுரி வான்ஸின் பாட்டி பேராசிரியர் சாந்தம்மா சிலுகுரி தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், ``இந்த தருணத்தை இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவின், ஒத்துழைப்பின் பாலமாக கருதுகிறேன். இந்த தம்பதி இந்தியாவின் சில பிரச்னைகளைத் தீர்ப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ஜே.டி.வான்ஸையும், என் பேத்தி உஷாவையும் வாழ்த்துகிறேன். உங்கள் நாட்டையும் (அமெரிக்காவையும்) என்னுடைய நாட்டையும் (இந்தியாவையும்) கடவுள் ஆசீர்வதிக்கட்டும். சிலுகுரி குடும்பத்திற்கு இது ஒரு பெருமையான தருணம். எனது கணவர் சுப்பிரமணிய சாஸ்திரி, அவரது மூத்த சகோதரர் ராம சாஸ்திரி பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகப் பணியாற்றினர். சமூக அக்கறையை மிகவும் மதிக்கும் குடும்பம் எங்களுடையது.

என் கணவர் அவசரநிலை காலத்தில் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரின் சிந்தனைதான் உஷாவுக்கும் இருக்கும். எனவே, ​​நமது நாட்டின் கௌரவத்தை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பு இந்த முறை உஷாவுடையது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Most Watched Reel: 554 மில்லியன் பார்வைகளைக் கடந்த இன்ஸ்டா ரீல்ஸ் - உலக சாதனை படைத்த கேரள இளைஞர்!

21 வயதான முஹம்மது ரிஸ்வான் (@riswan_freestyle) கேரளாவைச் சேர்ந்தவர். இவர் ஃப்ரீஸ்டைல் ​​கால்பந்து வீரர் ஆவார். நவம்பர் 2023 அன்று , அவர் ஒரு ரீலை வெளியிட்டபோது, அது மிகவும் வைரலானது. அது தற்போது உலகில... மேலும் பார்க்க

`வாரத்துக்கு 70 & 90 மணிநேர வேலை... பொருளாதார உயர்வா? அடிமைத்தனமா?' - விகடன் கருத்துக்கணிப்பு

உலகெங்கிலும் முதலாளிகளின் பெரும் வணிக லாபத்துக்காக, உற்பத்திக்கான கருவியாகச் சக்கையாகப் பிழியப்பட்டு, கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்களுக்கு, நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் 8 மணிநேர வே... மேலும் பார்க்க

Ajay Gnanamuthu Wedding: விக்ரம், விஷால், மிருணாளினி... திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

Ajay Gnanamuthu WeddingAjay Gnanamuthu WeddingAjay Gnanamuthu WeddingAjay Gnanamuthu WeddingAjay Gnanamuthu WeddingAjay Gnanamuthu WeddingAjay Gnanamuthu WeddingAjay Gnanamuthu WeddingAjay Gnanamuthu ... மேலும் பார்க்க

பொங்கல் விழாவுக்காக ஒன்று திரண்ட தமிழ் அமைப்புகள்! - மும்பையில் களைகட்டிய கொண்டாட்டம்

மும்பையில் விடுமுறை தினமான நேற்று, தமிழ் அமைப்புகள், தமிழ் சங்கங்கள் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியான பாண்டூப் பகுதியில் 'பாண்டூப் தமிழ்ச்சங்கம்' சார்பாக 14-வத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 10,12-ம் வகுப்பு மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் - சர்ச்சையானதால் புது முடிவு

மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 12வது வகுப்பு மற்றும் அதனை தொடர்ந்து 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வுக்காக இப்போதே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஹால் டிக்கெட்டில் மாணவர... மேலும் பார்க்க

அண்ணனுக்கு திருமணம்; தம்பிக்கு இறுதிச்சடங்கு- ஒரேநாளில் திருமண மகிழ்ச்சி துக்கமாக மாறிய சோகம்

விருதுநகர் மாவட்டத்தில், அண்ணனுக்குத் திருமணம் நடைபெற்று முடிந்த சில நிமிடங்களிலேயே, மணமகனின் தம்பி இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததால், திருமண மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில்... மேலும் பார்க்க