செய்திகள் :

ஜோஸ் பட்லர் அதிரடி: தில்லியை வீழ்த்தியது குஜராத்

post image

ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக தில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தில்லி வீரர்கள் யாருமே அரைசதம் அடிக்காவிட்டாலும் 4 வீரர்கள் 30-க்கும் அதிகமான ரன்களை அடித்து அசத்தினார்கள்.

கடைசி ஓவரில் சாய் கிஷோர் 1 விக்கெட் எடுத்து 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

100-ஆவது ஐபிஎல் போட்டியில் ராகுல் தெவாதியா!

204 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஜோஸ் பட்லர் தில்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

சாய் சுதர்சன் 36 ரன்களில் ஆட்டமிழக்க ரூதர்ஃபோர்டு களம் கண்டார்.

அவரும் தன்பங்கிற்கு சிறப்பாக விளையாடினார். இருப்பினும் அவர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது. பட்லர் 97(54பந்துகள்), ராகுல் தெவாதியா11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்: ஆர்சிபி வெற்றிபெற 158 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு: அணியில் லிவிங்ஸ்டன் நீக்கம்!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர... மேலும் பார்க்க

மிட்செல் ஸ்டார்க்காக விரும்பவில்லை..! ஆட்ட நாயகன் ஆவேஷ் கானின் பேட்டி!

ஜெய்பூரில் நேற்றிரவு (ஏப்.19) நடைபெற்ற ராஜஸ்தான் - லக்னௌ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து... மேலும் பார்க்க

14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி குறித்து சுந்தர் பிச்சை புகழ்ந்து பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் நேற்றிரவு ஜெய்ப... மேலும் பார்க்க

மார்க்ரம், பதோனி அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 180 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் அதிரடி: குஜராத் டைட்டன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 203/8 ரன்கள் எடுத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தில்லி வீரர்கள் யாருமே அர... மேலும் பார்க்க