`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
ஞாபக மறதி... வரமா சாபமா?| My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இன்று மாலை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, வானைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தேன். நீல வானில் வெண்மேகங்கள் என்று எங்கோ எப்போதோ படித்த வரி நினைவில் வந்தது. ஆனால் வானத்தில் வெண் மேகங்கள் இல்லாமல், வானம் வெவ்வேறு வண்ணங்களுடன் மாலை நேரத்திற்கே உரிய அழகுடன் காட்சி அளித்தது.
சற்றென்று சம்பந்தமே இல்லாமல் , *அந்த நீல நதிக் கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம், நான் பாடி வந்தேன் ஒரு ராகம்.. நாம் பழகி வந்தோம் சில காலம் * என்ற பழைய பாடலின் வரிகள் மனதில் வந்து போனது.
வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த வரிகள் ஏன் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டு இருந்தன எனத் தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளைக் கேட்டால் நம்மால் நிச்சயமாக, நதிக் கரையில் ஒருவன் நிற்கிறான், பாட்டுப் பாடிக் கொண்டே ஒரு பெண் அங்கு வருகிறாள், இருவரும் பழகி பின் பிரிந்து போன காட்சியைச் சுலபமாகக் கற்பனை செய்து விட முடியும்.

இந்த பழைய பாடலின் வரிகளை, சில வருடங்களுக்கு முன் இன்னொரு பாடலில் துஷ்யந்தனைப் பார்த்து சகுந்தலைப் பாடும் பாடலில் இணைத்திருப்பார்கள். 'ஏ துஷ்யந்தா..ஏ துஷ்யந்தா.. உன் சகுந்தலா தேடி வந்தாள்' எனத் தொடங்கும் அந்தப் பாடல்..
துஷ்யந்தன் - சகுந்தல் கதை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். வேட்டையாடச் சென்ற மன்னன் துஷ்யந்தன் மாலினி நதிக்கரையிலிருந்த முனிவரின் ஆசிரமத்தில் சகுந்தலாவைப் பார்த்து விரும்பி, காந்தர்வ முறைப்படி திருமணமும் செய்து கொண்டு, "திரும்ப வருகிறேன்" என்று சென்ற பின், சாபத்தால் நினைவுகளை இழந்து, சகுந்தலாவை மறந்து விடுவார்.
பிறகு கதை எப்படியோ சென்று, கடைசியில் அவருக்கும் சகுந்தலாவுக்கும் பிறந்த மகன் பரதனை ஏற்றுக் கொள்வதாக முடியும். மகாபாரதத்தில் ஏராளமான கதைகள் இது போன்று உள்ளன. எப்போதாவது படித்தாலோ, இல்லை கேட்டாலோ .. அப்போதுதான் கேட்பது போல் புதிதாகத் தோன்றும்..

ஆனால் இந்த துஷ்யந்தனுக்கு வந்த ஞாபகமறதி எல்லோருக்கும் வந்தால் எப்படி இருக்கும். திருமண விஷயங்களில் கூறவில்லை. மற்ற விஷயங்களில்.. சதா ஏதோ ஒரு நினைவு நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்.. அது பெரும்பாலும் நாம் துக்கமாக இருந்த நாட்களையோ இல்லை ஏதாவது ஒரு துயரத்தை அனுபவித்ததையோ நினைவூட்டும். மறதி என்ற ஒன்று மட்டும் இருந்தால், நம்மில் பாதிப் பேருக்குக் கவலைப்பட நேரமிருக்காது. நேற்றைய தின நினைவுகள், அடுத்தடுத்து வரும் நாட்களில் மனதில் தங்காமலிருந்து விட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும் எல்லோருக்கும்.
யாராவது ஒரு முனிவர் வந்து, உனக்கு ஞாபக மறதி உண்டாகட்டும் என என்னைப் பார்த்துச் சபித்தால், அந்த முனிவருக்கு ஆயுட்காலம் முழுவதும் நன்றி தெரிவித்துக் கொள்வேன். ஆனால் அவர்தான் எனக்குச் சாபமளித்தவர் என்பதை மறந்து விட்டால்? வெரி சாரி. முனிவர் எதிரில் வந்து நின்றாலும் என் வாயிலிருந்து தேங்க்ஸ் என்ற வார்த்தை வராமலே போய்விடும்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks