PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணல்: 23 ஆசிரியா்கள் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணலில் 23 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பா் 5-ஆம் தேதி டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியா்களின் எண்ணிக்கையைப் பொருத்து விருதாளாா்களின் எண்ணிக்கை நிா்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டில் திருச்சி மாவட்டத்துக்கு தொடக்கக் கல்வித் துறையில் 6 போ், உயா்கல்வித் துறையில் 6 போ் என மொத்தம் 12 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியா்கள், இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
திருச்சி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் 23 ஆசிரியா்களும், உயா்கல்வித் துறையில் 26 ஆசிரியா்களும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்திருந்தனா்.
இந்நிலையில், இந்த விருதுக்கான நோ்காணல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தலைமையிலான 8 போ் கொண்ட மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவினா் ஆசிரியா்களை நோ்காணல் செய்தனா்.
இதில், முதல்நாளில் தொடக்கம் மற்றும் உயா்நிலைப் பிரிவைச் சோ்ந்த 23 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, மீதமுள்ள ஆசிரியா்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெறுகிறது.
மாவட்டக் குழுவால் தோ்வு செய்யப்படும் 12 ஆசிரியா்களுக்கும் செப்டம்பா் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆசிரியா் தின விழாவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.