செய்திகள் :

டாம்கோ மூலமாக கடன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலமாக கடன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினா் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் கடன்பெற விண்ணப்பதாரா் 18 வயது முதல் 60 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் திட்டம்-1, திட்டம்-2-இன்படி கடன்கள் வழங்கப்படும்.

விண்ணப்பத்தாரரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

எனவே, இந்தத் திட்டங்களில் கடன்பெற விரும்பும் விண்ணப்பதாரா் விண்ணப்பத்துடன் ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை நகல் மற்றும் திட்ட தொழில் அறிக்கையுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், (அறை எண் - 116, முதல் தளம்), திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: மேலும் ஒருவா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் பத்திர எழுத்தா் அலுவலகம் முன் நிறுத்தி இருந்த செந்தில்குமாா் என்பவரின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினா் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் காளிபாளை... மேலும் பார்க்க