செய்திகள் :

டாஸ்மாக் ஊழல்: எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

post image

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை மதுபானக்கடை மது விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை கூறுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு இலட்சம் கோடிகளுக்கும் மேல் இமாலய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில், பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசைக் காப்பாற்றும் நோக்கில் 1000 கோடிகள் என குறைத்துக்கூறி விசாரணையைச் சுருக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசு மதுபானக்கடை சில்லறை விற்பனையில் போத்தலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்தது தொடங்கி, மதுபான கொள்முதல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, டாஸ்மாக் வாகன போக்குவரத்து உரிமம், மதுபானக்கூட உரிமம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் என பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. அதைத்தவிர டாஸ்மாக் மதுபான விற்பனையில் 50% மேல் கணக்கில் காட்டப்படாமல் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக திமுக அரசின் முதன்மை அமைச்சர்களில் ஒருவரான பழனிவேல் தியாகராஜன் ஆங்கில நாளிதழ் நேர்காணலில் அளித்துள்ள வாக்குமூலமும் திமுக அரசின் மதுபான ஊழலுக்கு மறுக்க முடியாத சான்று பகிர்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இல்லாமல் திடீரென திமுக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதும், மக்களவை தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, அனைத்துக்கட்சி கூட்டம் என திமுக அரசு ஆடும் அரசியல் ஆட்டங்கள் அனைத்தும் தன் மீதான பல்லாயிரம் கோடி மதுபான ஊழலை மறைக்க நடத்தும் நாடகமேயாகும்.

ஆம் ஆத்மி அரசின் மதுபான ஊழலில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு பல மாதங்கள் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, தெலங்கான மாநில மதுபான ஊழலில், ஆட்சியின் அதிகார மையமாக இருந்த அன்றைய முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் அம்மையார் கவிதா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆனால், 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் விசாரணையை விரிவாக்கி அப்படி எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்?

மற்ற மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில், அம்மாநிலங்களின் துறைசார்ந்த அமைச்சர்கள் முதல் முதலமைச்சர், முதல்வரின் குடும்பத்தினர் வரை ஊழலில் பங்குபெற்ற அனைவரும் பாகுபாடின்றி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஆளும் திமுக அரசிற்கு ஆதரவாக அமலாக்கத்துறை தொடர்ச்சியாக செயல்படுவது ஏன்? அப்படியென்றால எதிர்க்கட்சிகள் செய்யும் ஊழல் முறைகேடுகளை அமலாக்கத்துறை மூலம் வெளிப்படுத்துவதை வெறும் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே பாஜக அரசு பயன்படுத்துகிறதா? அதனால்தான் திமுக அரசு செய்துள்ள ஊழல்களை அமலாக்கத்துறை மூலம் குறைத்துக்காட்டி மூடி மறைக்க முயல்கிறதா பாஜக அரசு? திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? முழுமையாக விசாரணை நடத்தாமல் 1000 கோடிகள் மட்டுமே ஊழல் என்று அவசரமாக அறிவித்தது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு என்று அமலாக்கத்துறை அறிக்கை அளித்தது எப்படி? மக்களின் வரிப்பணத்தை மீட்க வேண்டும் என்ற அக்கறை உண்மையிலேயே அமலாக்கத்துறைக்கு இருக்குமாயின், மற்ற மாநில மதுபான ஊழலில் காட்டிய வேகத்தையும், தீவிரத்தையும் திமுக அரசின் மதுபான ஊழல் விசாரணையில் காட்ட தயங்குவது ஏன்? இதன் மூலம் பாஜக - திமுக இடையேயான மறைமுக உறவு மீண்டுமொருமுறை வெளிப்படுகிறது.

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

ஆகவே, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்ட இமாலய மதுபான ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள், உயர் அதிகார மையத்தில் உள்ளவர்கள் வரை அனைவரையும் கைது செய்து விசாரணை வளையத்தை விரிவு செய்து, பாகுபாடற்ற நேர்மையான விசாரணை நடத்தி, பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு நடைபெற்றுள்ள ஊழலை முழுமையாக வெளிப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை முழுவதுமாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரவைத் தலைவரை ஏன் சந்தித்தேன்? செங்கோட்டையன் விளக்கம்

பேரவைத் தலைவரை சந்தித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்களித்துள்ளார்.அதில், பேரவைத் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கமானது. இன்றுகூட 6, 7 அதிமுக உறுப்பினர்கள் பேரவ... மேலும் பார்க்க

ஹிந்தி சர்ச்சை: பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமல்! -திமுக எதிர்வினை

பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதாக திமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்... மேலும் பார்க்க

ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிற... மேலும் பார்க்க

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்திசெய்ய... மேலும் பார்க்க

முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில... மேலும் பார்க்க

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று வேளாண் பட்ஜெட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்ட... மேலும் பார்க்க