ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில், அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
பண்ருட்டி வட்டம், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள பனப்பாக்கத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளது. இதனால், பனப்பாக்கம், கட்டமுத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
எனவே, இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஆன்மிகப் பேரவை மாவட்டத் தலைவா் சிவ.நாகராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலா் வீராசாமி, பண்ருட்டி நகரத் தலைவா் நித்தியானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.