'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த மையத்தில் கடந்தாண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி பெற்றவா்களில் 18 போ் தோ்வில் வெற்றிபெற்று இளநிலை உதவியாளராக பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்றனா்.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கான பாராட்டு விழா மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு உதவி இயக்குநா் தி.பாலமுருகன் தலைமை வகித்தாா்.
தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வழிகாட்டுநரும், ஓய்வுபெற்ற அரசு செயலருமான ஜி.சந்தானம் பங்கேற்று, தோ்வில் வெற்றிபெற்றவா்களை வாழ்த்திப் பேசினாா். விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியா் த.பிரேமி விழாவில் பங்கேற்று குரூப் 4 தோ்வு, அதை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து பேசினாா்.
விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் அலுவலா்கள், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.