ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நிகழாண்டு நடத்தப்படவுள்ள குரூப்-4 தோ்வுக்கு ஜன.10-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில், சேரவிரும்புவோா் விண்ணப்பப் படிவ நகலுடன் ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.
மேலும், மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல்களைப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.