செய்திகள் :

``டிக்கெட் வாங்க பணம் இல்லை'' - ரயில் வீல்களுக்கிடையே அமர்ந்து 250 கி.மீ பயணம் செய்த இளைஞர்..!

post image

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் அடியில் அமர்ந்தவாறு 250 கி.மீ பயணம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புனேவில் இருந்து டானாபூர் வரை, ரயில் எண் 12149 டானாபூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயில் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது, ரயில்வே ஊழியர்கள் ரயில் சக்கரத்துக்கு இடையே வழக்கமான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டானாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் S4 பெட்டியின் அடியில் ஏதோ ஒன்று அசைவதை கவனித்துள்ளனர் ரயில்வே வண்டி மற்றும் வேகன் துறை ஊழியர்கள். உடனடியாக, வயர்லெஸ் தொலைதொடர்பு கருவி மூலம் லோகோ பைலட்டுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

ரயில் வீல்களுக்கிடையே அமர்ந்து பயணம்

எக்ஸ்பிரஸ் ரயிலின் S4 பெட்டியின் அடியில் ரோலிங் ஸ்டாக் மற்றும் கீழடுக்கில் ஒருவர் அமர்ந்து பயணித்து வந்ததை கண்டுபிடித்தனர். அந்த நபர் ரயிலுக்கு அடியில் இருக்கும் சக்கரத்துக்கு இடையே உள்ள பகுதியான போகி (Bogie) என்ற இடத்தில் அமர்ந்தவாரே ஆபத்தான முறையில் 250 கிலோமீட்டர் வரை பயணம் செய்துள்ளார். இடார்சி என்ற பகுதியில் இருந்து ஜபல்பூர் வரை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ரயிலுக்கு அடியிலேயே பயணம் செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படையிடம் (ஆர்பிஎஃப்) ரயில்வே ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் அந்த இளைஞர், "ரயில் டிக்கெட் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் இப்படி பயணம் செய்தேன். ஜபல்பூருக்கு செல்ல வேண்டும், அதற்காக இடார்சியில் ரயிலுக்கு அடியில் அமர்ந்து பயணத்தை தொடங்கினேன்" என்று ரயில்வே துறை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரயில் வீல்களுக்கிடையே அமர்ந்து பயணம்

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள ரயில்வே துறை ஊழியர்கள், "அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், அவருடைய பதில்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனை சுட்டிக்காட்டுவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

UP: வகுப்பில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர்... சிரித்த மாணவர்களை ஆத்திரத்தில் தாக்கியதால் கைது

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஆபாச வீடியோ பார்த்த ஆசிரியர் குல்தீப் யாதவ், 8 வயது மாணவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தனியார் பள்ளி ஆசிரியர் குல்தீப் யாதவ் தனது மொபைல் போனில் ஆபா... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது: நாயை வைத்து பாடம்புகட்டிய மும்பைவாசி... வெறுத்துப்போன மோசடி கும்பல்

சமீபகாலமாக மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த முறைகேட்டில் ஏராளமான... மேலும் பார்க்க

3-வது முறையாக பெண் குழந்தை... மனைவியை உயிரோடு எரித்துக்கொலை செய்த கொடூர கணவன்

ஆண், பெண் பாலின பாகுபாடு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும், மனைவி தொடர்ச்சியாக பெண் குழந்தை பெற்றால் அவர் மீது கணவன் கோபப்படுவது, வீட்டை விட்டு துரத்துவது போன்ற சம்பவங்களும் இன்றுவரை நடந்... மேலும் பார்க்க

25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரி... தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டிரைவர்!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். சொந்தமாக லாரி வைத்துள்ள சுரேஷ், அவரே அந்த லாரியை ஓட்டியும் வந்துள்ளார். இவர் கடந்த 16-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் இருந்து... மேலும் பார்க்க

வீடு புகுந்த முகமூடி திருடன்... 11 வயது மகனுடன் சேர்ந்து போராடி விரட்டியடித்த தாய்!

மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாத்திமா ஷேக்(32). காலை 11 மணிக்கு பாத்திமாவும், அவரது 11 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அந்நேரம் வீட்டுக்கதவு தட்டப்படும் ச... மேலும் பார்க்க

ஆன்லைனில் பீட்சா ஆர்டர்: டிப்ஸ் குறைவாக கொடுத்ததால் கத்தி குத்து, கொள்ளை... நடந்தது என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் ஆர்லாண்டோவின் தெற்கே உள்ள கிஸ்ஸிமியில் உள்ள ஒரு பெண், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். அங்கு தனது காதலன் மற்றும் அவர்களது ஐந்து ... மேலும் பார்க்க