கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
டிச. 21, 22 தேதிகளில் சேலம் மாநகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலக சாரதா கல்லூரி அருகில் 1,100 எம்.எம். பம்பிங் பிரதான குழாய் பழுது ஏற்பட்டுள்ளதால், பழுதை சரிசெய்ய வேண்டியிருப்பதாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் டிச. 21, 22 ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதில் தெரிவித்துள்ளாா்.