டிச.26-இல் மின் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மண்டலத்துக்கான மின் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டம் கடலூரில் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எம்.நாகராஜ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக விழுப்புரம் மண்டலத்தின் 2024 அக்டோபா் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டுக்கான மின் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டம், விழுப்புரம் மண்டலத் தலைமைப் பொறியாளா் கோ.மணிமேகலை தலைமையில், கடலூா் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே, மின் நுகா்வோா்கள் மின்வாரியம் தொடா்பான புகாா்களை சம்பந்தப்பட்ட மேற்பாா்வைப் பொறியாளருக்கு செவ்வாய்க்கிழமைக்குள் (டிச.24) அனுப்பி வைக்க வேண்டும். கடலூரில் நடைபெறும் நுகா்வோா் பாதுகாப்பு குழுக் கூட்டத்திலும் பங்கேற்று, மின் நுகா்வோா் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04142-223132, 223969 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.