செய்திகள் :

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

post image

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது எனும் பெயரில் நடந்த மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த வாட்ஸ்ஆப் கணக்குகள் பெரும்பாலும் கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து நாடுகளிலிருந்து மோசடி போன்ற குற்றச்செயல்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக வந்த புகார்களை விசாரித்து, வாட்ஸ்ஆப் கணக்குளை ஆராய்ந்து, வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு இந்த எண்களை அனுப்பி முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த மோசடிகள் பலவும், கம்போடியாவில் இருக்கும் சீன காசினோக்களில் இயங்கும் கால் செண்டர்கன் மூலம் நடப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாக கம்போடியா அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் அங்கு, இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்தும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடி என்பது, மோசடியாளர்கள் காவல்துறை அல்லது நீதித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் போல, சாதாரண மக்களிடம் பேசி, அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, பெரிய அளவில் பணத்தை பரிமாற்றம் செய்தால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம் என ஏமாற்றுவதாகும்.

இதில் மோசடியில் ஈடுபடுவோர் தங்களை காவல்துறை உயர் அதிகாரி, சிபிஐ அதிகாரி, வருமான வரித்துறை அதிகாரி, சுங்கத் துறை அதிகாரி போல காட்டிக்கொள்வார்கள். தவறுதலாக தங்களது பெயர் மோசடியில் சிக்கிக் கொண்டதைப் போல உணரும் மக்கள், எப்படியாவது இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.

அண்மையில், பிரதமர் மோடி, இது பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறி, இதுபோன்ற அழைப்புகள் வந்தால், சைபர் பிரிவுக்கு புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

ஒவ்வொரு நாளும் இந்த மோசடியின் மூலம் சராசரியாக ரூ.6 கோடி மோசடி செய்யப்படுவதாகவும், முதல் 10 மாதங்களில் ரூ.2140 கோடி இதுபோன்ற மோசடிகள் மூலம் சாதாரண மக்களின் பணம் திருடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவசரநிலை நாடாளுமன்ற முடிவுகளை செல்லாது என அறிவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘அவசரநிலை காலத்தில் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் செல்லாது என அறிவிக்க முடியாது’ என்று ‘சோஷலிசம், மதச்சாா்பற்ற மற்றும் ஒருமைப்பாடு’ ஆகிய வாா்த்தைகள் அரசமைப்புச் சட்ட முகவு... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரங்கள்: பதிவு அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மீண்டும் நீட்டித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி ச... மேலும் பார்க்க

சமாஜவாதி வெற்றிக்கு எதிராக மேனகா காந்தி மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

மக்களவைத் தோ்தல் தன்னை எதிா்த்து சமாஜவாதி வேட்பாளா் வெற்றி பெற்ற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த சில மாதங்களுக்கு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் காங். பாா்வையாளா்கள் நியமனம்

மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களில் தோ்தலுக்கு பிந்தைய நடவடிக்கைகளை கண்காணிக்க மேலிடப் பாா்வையாளா்களை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை நியமித்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அசோக் கெலாட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகம்: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கைத்துப்பாக்கியைக் கொண்டு ரீல்ஸ் விடியோ எடுக்க முயன்றபோது எதிா்பாரா விதமாக அதிலிருந்து தலையில் குண்டு பாய்ந்ததில் எட்டாம் வகுப்பு மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். இ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாசகங்களுடன் ரூ.30 கோடி ரொக்கம் மாற்றம்: பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ரூ. 30 கோடி ரூபாய் நோட்டுகளை கடந்த 2013-ஆம் ஆண்டில் ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) ஜம்மு கிளை மாற்றிக்கொடுத்த விவகார... மேலும் பார்க்க