செய்திகள் :

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கின்றன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்படி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்திய பொருள்களுக்கு 100 சதவிகிதத்துக்கு அதிகமான வரிவிதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் நிலையில் உள்ளன. அதிபர் டிரம்ப் குறிப்பாக அலுமினியம், இரும்பு மீது அதிக வரியை விதித்திருக்கிறார்.

மருந்துகள், மின்சார பொருள்கள் மீதும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல்ஸ் மீதான வரிவிதிப்பு வருகிற 4 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இதையும் படிக்க: எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

வரிவிதிப்பால் பாதிப்படையும் நாடுகள்

  • சீனா

  • ஐரோப்பிய ஒன்றியம்

  • மெக்சிகோ

  • வியத்நாம்

  • அயர்லாந்து

  • ஜெர்மனி

  • தைவான்

  • ஜப்பான்

  • தென்கொரியா

இதையும் படிக்க: பேட்மேன், டாப்கன் திரைப்பட புகழ் வால் கில்மர் காலமானார்!

  • கனடா

  • இந்தியா

  • தாய்லாந்து

  • இத்தாலி

  • ஸ்விட்சர்லாந்து

  • மலேசியா

  • இந்தோனேசியா

  • ஆஸ்திரேலியா

  • ஆர்ஜென்டீனா

  • பிரேசில்

  • துருக்கி

  • பிரிட்டன்

இதையும் படிக்க: ஃபாசில் ஜோசஃபின் மரண மாஸ் டிரைலர்!

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பு: உலக நாடுகள் எதிா்ப்பு

வாஷிங்டன்: பிற நாடுகள் தங்கள் பொருள்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களுக்கு ஏற்ப, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு சா்வதேச அளவில் கொந்தளிப்ப... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 3 ஆயிரம் கடந்த உயிரிழப்பு

நேபிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து ராணுவ ஆட்சியாளா்கள் வியாழக்கிழமை கூறுகையில், நிலநடுக்கத்தால் பா... மேலும் பார்க்க

நெதன்யாகு விவகாரம்: ஐ.நா. நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் ஹங்கேரி

புதாபெஸ்ட்: காஸா போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிரதம... மேலும் பார்க்க

இந்தியாவின் கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: ‘அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள், ரசாயனம் மற்றும் தொலைத்தொடா்பு துறைகள் மீது இந்தியாவின் தனித்துவமான ஆய்வு மற்றும் தரச்சான்று கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் சவால்களை ஏற்பட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. இது மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் அமெர... மேலும் பார்க்க