உயர்சாதித் தலைவர்கள் பழங்குடியினர் விவகாரத் துறைக்குத் தலைமை தாங்க வேண்டும்: மத்...
டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தினம் (ஜனவரி 31) நடைபெற்றது. அந்தப் போட்டி இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் கேப்டனாக வழிநடத்திய 50-வது போட்டியாகும்.
இதையும் படிக்க: ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
இங்கிலாந்து அணியை 50 டி20 போட்டிகளில் வழிநடத்தியுள்ள இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். அவருக்கு முன்பாக இயான் மோர்கன் இங்கிலாந்து அணியை 50-க்கும் அதிகமான டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.
இதுவரை இங்கிலாந்து அணிக்காக 133 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர் 3,528 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 101 ஆகும்.
இந்தியாவுக்கு எதிராக புணேவில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.