செய்திகள் :

டெஸ்ட்டில் ஓய்வு பெற்றது ஏன்? 2 மாதங்களுக்குப் பின் மனம் திறந்த கோலி!

post image

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விரைவிலேவே ஓய்வு பெற்றது ஏன்? என்பது பற்றி 2 மாதங்களுக்குப் பின் மனம் திறந்திருக்கிறார் விராட் கோலி.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, கடந்த மே மாதம் 12 ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

கேப்டனான ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த ஒரே வாரத்தில் விராட் கோலியும் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

டி20 போட்டிகளிலும் ஓய்வை அறிவித்துவிட்ட விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

36 வயதான விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 100 சதத்தையும், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களையும் எட்டுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்த நிலையில், டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்பது குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் விராட் கோலி.

மும்பையில் நடைபெற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் அறக்கட்டளையான யுவீகேன் (YouWeCan) தொடக்க விழாவில் விராட் கோலியும் கலந்துகொண்டார்.

முன்னாள் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், கெவின் பீட்டர்சன், பிரையன் லாரா, மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளரான கௌரவ், விராட் கோலியை மேடைக்கு அழைத்தார். அவரிடம், “டெஸ்ட் ஓய்வுக்கான காரணத்தை எப்போது கூறுவீர்கள். கிரிக்கெட் களத்தில் ரசிகர்கள் உங்களை மிஸ் செய்கிறார்கள்” எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்து விராட் கோலி பேசும் போது, “இரண்டு நாள்களுக்கு முன்னதாகத் தான் என்னுடைய தாடிக்கு டை அடித்தேன். 4 நாள்களுக்கு ஒரு முறை உங்களின் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்து விட்டது என்று அர்த்தம்!” எனத் தெரிவித்தார்.

இவ்வாறு பேசிய விராட் கோலி, முடிவில் யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் உடனான கிரிக்கெட் பயணம் குறித்தும் நினைவுகூர்ந்தார்.

Virat Kohli Breaks Silence On Test Retirement For First Time, Says "When You Are Colouring...

இதையும் படிக்க :ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் காலமானார்!

இங்கிலாந்து மகளிருக்கு எதிராக முதல்முறை... டி20 தொடரை வென்ற இந்திய மகளிரணி உற்சாகம்!

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டி20 தொடரினை முதல்முறையாக இந்திய மகளிரணி வென்ற சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய மகளிரணி 4-ஆவது டி20 போட்டியில் நேற்றிரவு வி... மேலும் பார்க்க

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி..! ரியல் மாட்ரிட் (0-4) மோசமான தோல்வி!

கிளப் உலகக் கோப்பையில் அரையிறுதியில் ரியல் மாட்ரிட்டை 4-0 என வீழ்த்தி பிஎஸ்ஜி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டிகள் முடிவடை... மேலும் பார்க்க

லாா்ட்ஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்: முன்னிலைக்காக இந்தியா - இங்கிலாந்து முனைப்பு

இந்தியா - இங்கிலாந்து மோதும் ஆண்டா்சன் - டெண்டுல்கா் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், லண்டனில் உள்ள லாா்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடா் த... மேலும் பார்க்க

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு பதிலடி கொடுப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவ... மேலும் பார்க்க

210 இன்னிங்ஸுக்குப் பிறகு சச்சின் - ஸ்டீவ் ஸ்மித் ஒப்பீடு! யார் சிறந்தவர்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் 210 இன்னிங்ஸுக்குப் பிறகான ஒப்பிட்டீல் இருவருமே கிட்டதட்ட சரிசமமாக ரன்களை குவித்துள்ளார்கள். இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடரிலிருந்து விலகும் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்!

முத்தரப்பு டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் விலகியுள்ளார்.நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரி... மேலும் பார்க்க