செய்திகள் :

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி..! ரியல் மாட்ரிட் (0-4) மோசமான தோல்வி!

post image

கிளப் உலகக் கோப்பையில் அரையிறுதியில் ரியல் மாட்ரிட்டை 4-0 என வீழ்த்தி பிஎஸ்ஜி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ளன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பிஎஸ்ஜி - ரியல் மாட்ரிட் போட்டி ஒரு பக்கமாகவே சென்றது.

இந்தப் போட்டியில் முதல் 25 நிமிஷங்களில் (6’, 9’, 24’) 3 கோல்களை அடித்து மிரட்டியது பிஎஸ்ஜி.

இரண்டாம் பாதியில் 870ஆவது நிமிஷத்திலும் பிஎஸ்ஜி ஒரு கோல் அடித்து 4-0 என பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 69 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. 92 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்து அசத்தியதும் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கிறது.

பிஎஸ்ஜி அணியில் 2 கோல்கள் அடித்த ஃபேபியன் ரூயிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பிஎஸ்ஜி அணி இலக்கை நோக்கி 7 முறை அடிக்க ரியல் மாட்ரிட் 2 முறை மட்டுமே முயற்சித்தது. அதையும் கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.

இறுதிப் போட்டியில் செல்ஸி அணியுடன் பிஎஸ்ஜி மோதுகிறது. நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் பரிதாபமாக தோல்வியுற்றது.

Paris Saint-Germain ran riot against Real Madrid and dispatched them 4–0 in the Club world cup semifinals.

லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று ... மேலும் பார்க்க

இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை; பிசிசிஐ கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து... மேலும் பார்க்க

எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி

இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமா... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க

37-வது சதம் விளாசிய ஜோ ரூட்; ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் சாதனை முறியடிப்பு!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவரது 37-வது சதத்தைப் பதிவு செய்தார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 10) தொடங்கியது. ... மேலும் பார்க்க

அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா

அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.... மேலும் பார்க்க