கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
`டேக் ஆஃப்’ ஆகும் கோவை `மெட்ரோ ரயில்’ திட்டம் - சத்தி சாலையில் அதிகாரிகள் ஆய்வு
கோவை மாவட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டே மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி கோவையில் ரூ. 10,740 கோடி மதிப்பில் 34.8 கி.மீ தொலைவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க முடிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் விதமாகவும், ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை இணைக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனிடையே சத்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் சவால் உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பதால் சரவணம்பட்டி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதே சாலையில் மெட்ரோ ரயில் திட்டமும் வரவுள்ளது. இந்நிலையில், சத்தி சாலை கணபதி டெக்ஸ்டூல் முதல் சரவணம்பட்டி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மெட்ரோ திட்ட இணை பொது மேலாளர் நாகேந்திரன் ஆகியோர் அங்கு நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “3 கி.மீ தொலைவு மேம்பாலத்துக்கு டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை 20 மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில் திட்டம் நிலம் கையகப்படுத்துதலுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் இரண்டு பணிகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs