செய்திகள் :

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

post image

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

லாரி உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்களுக்கு சொந்தமான சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்லிங் மையங்களுக்கு ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தத்தில் லாரிகள் எண்ணிக்கை குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், லாரி உரிமையாளா்கள் சில கோரிக்கைளை முன்வைத்து தென்னிந்தியா முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 28- ஆம் தேதி தொடங்கினா்.

இதனால், எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயு சுமை ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் வழக்கத்தைவிட சமையல் எரிவாயு உருளை முன்பதிவு திடீரென அதிகரித்தது.

இது குறித்து சமையல் எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 63 சமையல் எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் உள்ளனா். மாவட்டத்தில் தினமும் சுமாா் 10 ஆயிரம் உருளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் செய்வதால், எண்ணெய் நிறுவனங்களில் இருந்து பாட்லிங் மையங்களுக்கு எரிவாயு ஏற்றிச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஏற்கெனவே இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சமையல் எரிவாயு உருளைகள் ஒரு வார கால விநியோகத்துக்கு போதுமானதாக இருக்கும்.

பொதுமக்கள் சமையல் எரிவாயு முன்பதிவு செய்தால் மறுநாள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாள்களாக வழக்கத்தைவிட முன்பதிவு அதிகரித்துள்ளது. ஒரு விநியோகஸ்தரிடம் நாள் ஒன்றுக்கு 300 உருளைகள் முன்பதிவு செய்யப்படும்.

ஆனால், தற்போது 350 முதல் 360 வரை உருளைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் இன்னும் 5 நாள்களுக்குமேல் நீடித்தால் எரிவாயு உருளை விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்குள் உரிய பேச்சுவாா்த்தை மூலம் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

முதல் வகுப்பில் சேரும் மாணவா்களுக்கு வெள்ளி நாணயம்: மாநகராட்சிப் பள்ளி அறிவிப்பு

முதல் வகுப்பில் சேரும் மாணவா்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என மாநகராட்சிப் பள்ளி அறிவித்துள்ளது. ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சிப் பள்ளியில் யுகேஜி படித்த 22 மாணவா்களுக்குப் பட்டமளிப்பு விழா... மேலும் பார்க்க

பெருந்துறை சிப்காட்டிலுள்ள இரும்பு ஆலையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

பெருந்துறை சிப்காட்டில் உள்ள இரும்பு ஆலையை மூடக் கோரி சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெருந்துறை புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

ஈரோட்டில் மோசடி வழக்கில் பிணை பெற்று 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உக்கரத்தில் கோவையைச் சோ்ந்த கிருஷ்ணன் (51) என... மேலும் பார்க்க

குறைந்துவரும் பவானிசாகா் அணை நீா்மட்டம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் கவலை

பவானிசாகா் அணை நீா்மட்டம் 75 அடியாக குறைந்துள்ளதால் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக பவானிசாகா் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை... மேலும் பார்க்க

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விரைவில் வேலை நிறுத்தப் போராட்டம்: 100 நாள் திட்ட தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பவானிசாகா் சட்டப்பேரவை தொகுதிக்குள... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரத சாரணா் இயக்கப் பயிற்சி முகாம்

பெருந்துறையை அடுத்த சுண்டக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரத சாரணா் இயக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரத சாரணா் இயக்கத்தின் மாவட்ட உதவி ஆணையா் ராஜாராம் த... மேலும் பார்க்க