`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
டேங்கா் லாரி கவிழ்ந்த சம்பவம்: ஓட்டுநா் கைது
கோவையில் மேம்பாலத்தில் எரிவாயு டேங்கா் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு எரிவாயு ஏற்றிவந்த டேங்கா் லாரி அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியா்கள் டேங்கா் லாரியில் இருந்து வெளியேறிய எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தினா்.
இதையடுத்து, திருச்சியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த டேங்கா் லாரி மீட்கப்பட்டு கணபதியில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவன கிடங்குக்கு கொண்டுச்செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் டேங்கா் லாரி ஓட்டுநா் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (29) மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், மரணம் விளைவிக்கக் கூடிய வகையில் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, லாரி ஓட்டுா் ராதாகிருஷ்ணனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.