இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6
``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்
நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்தும்' என்று பேசியிருந்தார்.
ராகுல் காந்தி பதிவு
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பிரதமர் மோடி ட்ரம்பைப் பார்த்து பயப்படுகிறார்.
1. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்காது என்பதை ட்ரம்ப் முடிவு செய்து, அறிவிப்பதை மோடி அனுமதித்திருக்கிறார்.
2. ட்ரம்ப் இந்தியாவைச் சாடி வந்தாலும், அவருக்கு வாழ்த்து மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பி வருகிறார்.

3. இந்திய நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. ஷர்ம் எல்-ஷேக்கை தவிர்த்திருக்கிறார்.
5. ஆபரேஷன் சிந்தூர் குறித்த ட்ரம்ப் பேச்சிற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை" என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பதில்
தேச நலனுக்காக இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் என்று இந்தியா சொல்லி வந்த நிலையில், நேற்று ட்ரம்ப் இவ்வாறு பேசியிருக்கிறார்.
ஆனால், இது குறித்து இந்தியா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.