செய்திகள் :

தக் லைஃப்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

post image

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில் முன்பதிவுகளில் அசத்தி வருகிறது.

மொழி குறித்து கமல் பேசியது கர்நாடகத்தில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தக் லைஃப் படம் அங்கு வெளியாகாது எனக் கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழகத்தில் நடிகர் கமலுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு இந்தப் படத்துக்கு நாளை (ஜூன்.5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது.

அபாரஜித் அதிரடியில் சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 6 விக்கெ... மேலும் பார்க்க

இந்திய கூடைப்பந்து லீக் தொடக்கம்!

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏசிஜி ஸ்போா்ட்ஸ் பி லிட், பிஎஃப்ஐ இணைந்து, நடத்தவுள்ள இந்த லீக் தொடா் ஆடவா் 5*5, மகளிா் 3*3 பிரிவுகளஇ... மேலும் பார்க்க

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதியில் சபலென்கா - கௌஃப் மோதல்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்... மேலும் பார்க்க

மாநில ஜூனியா் கூடைப்பந்து: திருவள்ளூா் சாம்பியன்

தமிழ்நாடு மாநில ஜூனியா் ஆடவா் கூடைப்பந்துப் போட்டியில் திருவள்ளூா் மாவட்டம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்கம், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சாா்பில் ஆடவா், மகளிா் ஜூனியா் கூடைப்ப... மேலும் பார்க்க