மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 13 ரயில் நிலையங்கள...
தங்கப் பனை விருது வென்ற டென்ஜெல் வாஷிங்டன்..!
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் டென்ஜெல் வாஷிங்டனுக்கு தங்கப் பனை (பாம் டி’ஓர்) விருது அளிக்கப்பட்டது.
ஹாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைசாலியான டென்ஜெல் வாஷிங்டன் தற்போது ஹையெஸ்ட் டூ லோவெஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குநர் ஸ்பைக் லீ இயக்கிய இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மே.13 முதல் மே.24வரை இந்த விழா நடைபெறுகிறது.
70 வயதாகும் டென்ஜெல் வாஷிங்டன் 9 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் 2 முறை விருது வாங்கியுள்ளார். இவருக்கு இது முதல் தங்கப் பனைவிருது என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற பிறகு டென்ஜெல் வாஷிங்டன் கூறியதாவது:
இது எனக்கு முற்றிலும் ஆச்சரியமானது. நான் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறேன்.
என்னுடைய சகோதரனுடன் மீண்டும் பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவர் இன்னொரு அம்மாவின் வயிற்றில் பிறந்த எனது சகோதரர் போன்றவர். அதனால்தான் இங்கு (கேன்ஸ்) மீண்டும் வந்திருக்கிறேன்.
இந்த அறையில் இருக்கும் நாங்கள் நல்ல உடைகளை உடுத்தி படங்களை எடுக்கும் சலுகைகளைப் பெற்றிருக்கிறோம். அதற்காக சம்பளமும் பெறுகிறோம்.
அளவிட முடியாத அளவுக்கு நானும் எனது படக்குழுவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எனது இதயத்தின் அடியாளத்தில் இருந்து அனைவருக்கும் நன்றி சொல்கிறேன் என்றார்.