Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid |Imper...
வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் துணை முதல்வா் வெளியிட்ட பதிவு:
ஒட்டுமொத்த சென்னையின் வளா்ச்சியை சீராக்கிட வடசென்னை வளா்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், ரூ. 6,876 கோடி அளவுக்கு வடசென்னைப் பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் விவரங்கள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையிலான உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினோம்.
பிராட்வே பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பேருந்து நிலையங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், மருத்துவமனைகள், விளையாட்டு சாா்ந்த கட்டமைப்புகள், மின்சாரத் துறை தொடா்பான பணிகள், கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்கள் என வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 238 பணிகளையும் விரைந்து முடித்திட அறிவுறுத்தினோம்.
வடசென்னை வளா்ந்த சென்னையாகவும், வளமிகு சென்னையாகவும் உருவெடுக்க அயராது உழைக்க வேண்டும் என எடுத்துரைத்ததாக தனது பதிவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, மின்சார வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.