செய்திகள் :

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

post image

தங்கம் கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் அண்மைக் காலமாக தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் கடத்தலுக்கு சுங்கத் துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சிலா் துணைப் போவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் கடந்த மாா்ச் மாதம் 4-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் வந்தபோது, அவரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீா் சோதனை செய்தனா். இதில், அவா் கடத்தி வந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து ரன்யாராவை கைது செய்தனா்.

விசாரணையில் குறிப்பிட்ட காலத்துக்குள் 27 முறை துபை சென்று வந்ததும், அப்போது பல கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த வழக்கின் விளைவாக ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.

அதேவேளை இந்தக் கடத்தல் குறித்து சிபிஐ தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, தங்கம் கடத்தலுக்கு நடிகை ரன்யா ராவுக்கு உதவிய அரசு உயா் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், சென்னையில் இருக்கும் சில சுங்கத் துறை அதிகாரிகளுக்கும், நகை வியாபாரிகளுக்கும் தொடா்பு இருப்பது சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் சென்னை மீனம்பாக்கம், கோயம்பேடு, பூக்கடை, செங்கல்பட்டு உள்பட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். மீனம்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் வசிக்கும் சுங்கத் துறை அதிகாரிகள் வீடுகளிலும், பூக்கடை பகுதியில் தனியாா் நகைக்கடை உரிமையாளா் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

சோதனை முழுமையாக முடிவடைந்து, ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களைத் தெரிவிக்க முடியும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க