சாகும் வரை ஆயுள் தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 13.05.25 | PollachiCaseJudg...
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது.
தற்போது பதற்றம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, திங்கள்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என 2 முறை குறைந்தது. இதனால், தங்கம் விலை கிராமுக்கு ரூ. 295 குறைந்து ரூ. 8,750-க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று(மே 13) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!