திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
இந்த வாரம் தொடங்கியதில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை புதன்கிழமை காலை ரூ. 80 அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ. 58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 7,260.
இதையும் படிக்க : தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!
மேலும், வெள்ளியின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.