Robin Uthappa: ரூ. 23 லட்சம் PF மோசடி... உத்தப்பாவிற்குக் கைது வாரண்ட்; பின்னணி ...
தங்கம், வெள்ளி விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (டிச. 21) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கும், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.56,320-க்கும், கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.7,040-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க:இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (டிச. 20) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (டிச.21) பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800-க்கும், கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.7,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.