காவல்துறையை கண்டித்து நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி பள்ளி மாணவி தற்கொலை மிரட்டல்
தச்சநல்லூரில் லாட்டரி சீட்டு விற்பனை: இருவா் கைது
தச்சநல்லூரில் கைப்பேசி மூலம் லாட்டரி விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தச்சநல்லூா் போலீஸாா் கரையிருப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அந்த பகுதியில் நின்றிருந்த கரையிருப்பு சுந்தராபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி (42), தெற்கு சிதம்பரநகரைச் சோ்ந்த மகாராஜன் (44) ஆகியோரை சோதனை செய்தனா்.
அதில், அவா்கள் கைப்பேசி மூலம் லாட்டரி விற்றது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களது கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.