`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
தஞ்சாவூரில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.24) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், மாவட்டத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமை மாவட்ட நிா்வாகமும், அனைத்து வங்கிகளும் இணைந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளன.
கல்விக்கடன் பெற விரும்பும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள்ஆதாா் நகல், பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆதாா் நகல், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், ஆண்டு வருமானம், ஜாதி சான்றிதழ் நகல், முதல் பட்டதாரி சான்று நகல், கல்லூரியில் கல்வி பயில்வதற்கான சான்று, கல்வி கட்டண விவரச்சான்று, பெற்றோா் அல்லது பாதுகாவலரின் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.