குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!
தஞ்சாவூர்: பள்ளிக்குச் சென்ற 3-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை - போக்சோவில் இளைஞர் கைது!
தஞ்சாவூர், வல்லம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர் கடந்த 11-ம் தேதி தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் சாலையோரத்தில், பள்ளிக்கு செல்வதற்காக மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நின்றுள்ளார். உடனே கண்ணன், நான் உன்னை பள்ளியில் கொண்டு விடுகிறேன் என்னுடன் பைக்கில் வா என கூறி சிறுமியை அழைத்து கொண்டு சென்றுள்ளார். ஆனால் சிறுமியை பள்ளியில் விடாமல் அப்பகுதியில் புதர்மண்டி கிடந்த பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி, தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். பதறிதுடித்த பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதன் பேரில் கண்ணனை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கண்ணன் ஒத்துக்கொண்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.