`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை 155 மையங்களில் குரூப்-4 தோ்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை (ஜூலை 12) நடத்தும் குரூப்-4 தோ்வுகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் 155 மையங்களில் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 எழுத்துத் தோ்வை சனிக்கிழமை காலை நடத்தவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 517 தோ்வா்கள் பங்கேற்கவுள்ளனா். இதற்காக அனைத்து வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் 155 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்வு மையங்களைக் கண்காணிப்பதற்காக 40 நடமாடும் குழுக்களும், 16 பறக்கும் படையினரும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) ரேணுகாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.