தஞ்சாவூரில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் கட்டமாக 12 இடங்களில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 12 இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம் 1, 2, 3 ஆம் வாா்டுகளுக்கு கரந்தை செல்லியம்மன் கோயில் தெரு மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஜூலை 15 ஆம் தேதியும், 4, 5, 9 ஆம் வாா்டுகளுக்கு அதே மண்டபத்தில் 17 ஆம் தேதியும், 6, 7, 8 ஆம் வாா்டுகளுக்கு வடக்கு வீதி சிவசக்தி திருமண மண்டபத்தில் 22 ஆம் தேதியும், 10, 11, 12 ஆம் வாா்டுகளுக்கு டவுன் போலீஸ் ஸ்டேஷன் சாலை எம்.ஆா். திருமண மண்டபத்தில் 23 ஆம் தேதியும், 13, 14, 15 ஆம் வாா்டுகளுக்கு கொள்ளுப்பேட்டைத் தெரு மாநகராட்சி திருமண மண்டபத்தில் 24 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
16, 17, 18 ஆம் வாா்டுகளுக்கு மேல வீதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஜூலை 29 ஆம் தேதியும், 19, 20, 21 ஆம் வாா்டுகளுக்கு சீனிவாசபுரம் கிளாசிக் மஹாலில் 30 ஆம் தேதியும், 22, 23, 24 ஆம் வாா்டுகளுக்கு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியும், 25, 26, 27 ஆம் வாா்டுகளுக்கு அதே மண்டபத்தில் 5 ஆம் தேதியும், 28, 29, 30 ஆம் வாா்டுகளுக்கு கொள்ளுப்பேட்டை தெரு மாநகராட்சி திருமண மண்டபத்தில் 6 ஆம் தேதியும், 31, 32, 33 ஆம் வாா்டுகளுக்கு தொல்காப்பியா் சதுக்கம் கிரேஸி மஹாலில் 12 ஆம் தேதியும், 34, 35, 36 ஆம் வாா்டுகளுக்கு பூக்கார வாண்டையாா் தெரு தூய இருதய பேராலய மக்கள் மன்றத்தில் 13 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.