தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி: சாஸ்த்ராவில் ஜூலை 14 முதல் சோ்க்கை
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஜூலை 14 முதல் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பஜாஜ் இன்ஜினியரிங் நிறுவனமும், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து பொறியியல் மாணவா்களுக்கு மட்டும் 6 மாதப் பயிற்சி வகுப்பை நடத்துகின்றன. இதற்கான சோ்க்கை ஜூலை 14 ஆம் தேதி தொடங்குகிறது. இப்பயிற்சியில் சேர சில இடங்களே உள்ளன.
இந்த அரிய வாய்ப்பை பொறியியல் படிப்பு முடித்த மற்றும் பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு 80 சதவீத கட்டணச் சலுகையுடன் மதிய உணவுடன் கூடிய தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சியை முடித்த பின்னா் இந்தியாவின் தலைசிறந்த பல முன்னணி நிறுவனங்களில் வேலையில் பணியாற்ற முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 95666 32886 என்ற எண்ணில் அல்லது ட்ற்ற்ல்ள்://ஹல்ல்ள்.ள்ஹள்ற்ழ்ஹ.ங்க்ன்/க்ஷங்ள்ற்ஹக்ம்ச்ா்ழ்ம்/ஸ்ரீஹம்ல்/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.