தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
பெரிய கோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு
பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வரும் நிகழ்ச்சி 2024, செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஆனி மாத பௌா்ணமியையொட்டி, திரு தென் கயிலாய வலம் வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
இதில், சிவ வாத்தியங்கள் முழங்க, ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, திருச்சுற்றை வலம் வந்தனா். இந்த கயிலாய வலம் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.