தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோயில் தமிழர்களின் கட்டடக் கலைக்கும் - சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலைக் காண தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
இந்த நிலையில் இன்று வார விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காலை முதல் பெரிய கோயில் குவிந்து அதன் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் பெருவுடையாரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.